தமிழக செய்திகள்

கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

நவராத்திரி விழாவையொட்டி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தினத்தந்தி

நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கோத்தகிரியில் உள்ள கோவில்களில் கொலு வைத்து வழிபாடு நடந்து வருகிறது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கொலு அழகாக அடுக்கி வைக்கப்பட்டு, தினமும் பூஜை நடைபெற்று வருகிறது. கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்து வருகிறது. நேற்று 2-வது நாள் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் கோத்தகிரி பகுதியில் உள்ள கோவில்களில் கொலு வழிபாடு நடைபெற்றது. நவராத்திரி விழாவையொட்டி வீடுகளிலும் பலர் கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வருகிற 23-ந் தேதி சரஸ்வதி பூஜை, 24-ந் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து