நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜ நடந்தது.இதேபோல் வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.