தமிழக செய்திகள்

பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் நந்தி பெருமான் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர், மணிமங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு