தமிழக செய்திகள்

திருவாரூரில், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியையொட்டி திருவாரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை இன்று நடக்கிறது.

தினத்தந்தி

புனித வெள்ளியையொட்டி திருவாரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை இன்று நடக்கிறது.

ஈஸ்டர் பண்டிகை

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் வகையில் தவக்காலத்தின் 40 நாட்களில் கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து, தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த தவக்காலத்தின் கடைசி வாரமான புனித வாரத்தின் தொடக்க ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாகவும், வியாழக்கிழமை புனித வியாழனாகவும் அனுசரிக்கப்பட்டது.

சிறப்பு பிரார்த்தனை

மேலும் இயேசு சிலுவையில் உயிர் விட்ட நாளை புனித வெள்ளியாகவும், துக்க நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. புனித வெள்ளியையொட்டி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அருட் தந்தை ஜெரால்ட்டு தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. அதனை தொடர்ந்து திருச்சிலுவையை இறைமக்கள் அனைவரும் முத்தி செய்கின்றனர்.

மேலும் ஏசுவின் பாடுகளை நினைவு கூரும் வகையில் சிலுவை பாதை வழிபாடு நடக்கிறது. இதேபோல் பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள ஆர்.சி. ஆலயம் மற்றும் நகரில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்