தமிழக செய்திகள்

சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள்

சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நாளை நடக்கிறது.

தினத்தந்தி

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள், விவரம் வருமாறு:-பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு நொச்சியம், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு தொண்டமாந்துறை (மேற்கு), குன்னம் வட்டாரத்திற்கு ஒகளூர் (கிழக்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு வரகுபாடி ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.இதே போல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு கீழக்கொளத்தூர், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு தண்டலை, செந்துறை வட்டாரத்திற்கு (பெரியாக்குறிச்சி), ஆண்டிமடம் வட்டாரத்திற்கு கூவத்தூர் (வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.

கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்