தமிழக செய்திகள்

சிறப்பு ஆசிரியர் பணிக்கு பட்டயப்படிப்பு படித்தவர்களையும் பரிசீலிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த 2017-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வை நடத்தியது. இதில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

தினத்தந்தி

மதுரை,

தமிழகத்தில் காலியாக உள்ள 632 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வை நடத்தியது. இதில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் சிலருடைய பட்டப்படிப்புகள் இந்த பணிக்கு உரிய கல்வித்தகுதி இல்லை என கூறி பலரை தேர்வு செய்யவில்லை.

இதை எதிர்த்து பலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், அந்த வழக்குகளை விசாரித்த தனிநீதிபதி, தேர்ந்தெடுக்கப்பட்டதாக வெளியான பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் உடற்கல்வி சான்றிதழுக்கு, பட்டயப்படிப்பு படித்தவர்களையும், தகுதியானவர்களாக கருதி ஏற்கனவே தேர்வானவர்களுடன் இணைத்து அவர்களுக்கும் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும். இந்த உத்தரவு நிவாரணம் கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை