தமிழக செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆயுத பூஜையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை எழும்பூர்-நெல்லை, நெல்லை-தாம்பரம் மற்றும் சென்னை சென்டிரல்-மங்களூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, இன்று (20-ந்தேதி) இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண்.06043) புறப்பட்டு நாளை (21-ந்தேதி) காலை 9.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக வரும் 24-ந்தேதி நெல்லையிலிருந்து மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரெயில் (06044) புறப்பட்டு அடுத்தநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து மங்களூருக்கு இன்று இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரெயில் (06047) புறப்பட்டு நாளை மாலை 4 மணிக்கு மங்களூர் சென்றடையும். மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து நாளை இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரெயில் (06048) புறப்பட்டு அடுத்தநாள் காலை 11.20 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்