தமிழக செய்திகள்

மங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரெயில்

மங்களூரு சென்டிரலில் இருந்து அக்டோபர் 19-ந் தேதி காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதேநாள் இரவு 7.30 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடைகிறது.

சென்னை,

மங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அக்டோபர் 19-ந் தேதி (திங்கட்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரெயில்

மங்களூரு சென்டிரலில் இருந்து அக்டோபர் 19-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதேநாள் இரவு 7.30 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடைகிறது.

நின்று செல்லும் இடங்கள்

21 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

SCROLL FOR NEXT