தமிழக செய்திகள்

நெல்லை - திருச்செந்தூர் இடையே இன்றும், நாளையும் சிறப்பு ரெயில் இயக்கம்

தசரா திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று சூரசம்காரம் நடக்கிறது.

இதனையொட்டி, குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்காக நெல்லை - திருச்செந்தூர் இடையே இன்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நெல்லைக்கு இரவு 10.30 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திருச்செந்தூருக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்