தமிழக செய்திகள்

சென்னை - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

சென்னை,

பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06545) வருகிற 9 ம் தேதி முதல் ஒவ்வொறு வியாழக்கிழமையிலும் பெங்களூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் மாலை 3 மணிக்கு சென்னை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06546) வருகிற 9-ம் தேதி முதல் ஒவ்வொறு வியாழக்கிழமையிலும் மாலை 4.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு பெங்களூரு வந்து சேரும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.