தமிழக செய்திகள்

வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரெயில்வே வாரியம் அனுமதி அளித்ததையடுத்து கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்- டெல்லி (வண்டி எண்: 02615) இடையே தினசரி இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் காலை 6.30 மணிக்கு டெல்லி சென்றடையும். மறுமார்க்கமாக டெல்லி- எம்.ஜி.ஆர். சென்டிரல் (02616) இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் டெல்லியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் காலை 6.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்- ஷாப்ரா (02669) இடையே திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக ஷாப்ரா- எம்.ஜி.ஆர். சென்டிரல் (02670) இடையே திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஷாப்ரா ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும்.

* திருச்சி- ஹவுரா (02664) இடையே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக ஹவுரா- திருச்சி (02663) இடையே வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஹவுராவில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை