தமிழக செய்திகள்

500 கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை

500 கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பி.பாரைப்பட்டி கிராமத்தில் கடந்த சில வாரங்களாக கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து கால்நடைகள் இறந்து வருவதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் மீனாட்சிசுந்தரம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தார். இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் கால்நடை டாக்டர்கள் சிறப்பு முகாம் அமைத்து கால்நடைகளை பரிசோதனை செய்தனர். பி.பாரைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமில் குமிழங்குளம் கால்நடை மருந்தக டாக்டர் சசி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 500 கால்நடைகளை பரிசோதனை செய்தனர். இதில் காலநிலை மாற்றத்தில் கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால் குமிழங்குளம் மருந்தகத்துக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற டாக்டர் சசி அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...