தமிழக செய்திகள்

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினத்தந்தி

பெருமாள் கோவில்

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டையில் கீழ 3-ம் வீதியில் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல விட்டோபா பெருமாள் கோவில், திருக்கோகர்ணம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கீரனூர், ஆவுடையார்கோவில்

குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவில், மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள் கோவில், களமாவூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதி கேசவ பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் கிராமத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீரமங்கலம்

கீரமங்கலம் வடக்கு கிராமத்தில் மாயம்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல கீரமங்கலம் வேம்பங்குடி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு