தமிழக செய்திகள்

அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தினத்தந்தி

தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் தங்களது நகைகளை பூஜைக்கு கொடுத்து திரும்ப பெற்று காண்டனர். இதேபோல மண்மங்கலம், காகிதபுரம் பகுதிகளில் கோவில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு