தமிழக செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு

நாங்கூர் பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்செய்தனர்

திருவெண்காடு:

சீர்காழி அருகே நாங்கூரில் 11 வைணவ திவ்ய தேச பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு கோவில்களும் தனிச்சிறப்பை கொண்டு விளங்குவது குறிப்பிடத்தக்கது. நேற்று 4 வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கீழச்சாலை மாதவப் பெருமாள் கோவில், நாங்கூர் பள்ளிகொண்ட பெருமாள், செம்பொன் அரங்கர், வன்புருஷோத்தம பெருமாள் உள்ளிட்ட 11 கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அண்ணன் பெருமாள் கோவிலில் நேற்று மங்களாசாசனம் நடந்தது. இதனையடுத்து திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், வைணவ அடியார்கள் திரு கூட்டத் தலைவர் வக்கீல் ராமதாஸ், கோவில் அர்ச்சகர் கோகுல் பட்டாச்சாரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருவெண்காடு அருகே பஞ்ச (5) நரசிம்மர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்