தமிழக செய்திகள்

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

புரட்டாசி மாத சதுர்தசி திதியையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை நேற்று மாலை நடந்தது. ஆனந்த நடராஜர், சிவகாம சுந்தரி ஆகிய சுவாமிகளுக்கு பக்தர்கள் கொடுத்த விபூதி, சந்தனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிவாச்சாரியார்கள் அபிஷேகங்கள் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது சன்னதி முன்பு கூடியிருந்த திரளான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே பேல் பெரம்பலூர் மாவட்டத்தில் நடராஜருக்கு சன்னதி உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்