தமிழக செய்திகள்

பெரம்பலூரில் நாளை கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

அண்ணா-பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி பெரம்பலூரில் நாளை நடக்கிறது.

தினத்தந்தி

தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நாளையும் (வெள்ளிக்கிழமை), தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 19-ந்தேதியும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள பாரத சாரணர் மாவட்ட பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியானது காலை 9 மணிக்கு தொடங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குனர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடம், அனுமதி பெற்று பேச்சுப்போட்டியில் பங்கேற்க வேண்டும். தற்போது பள்ளிகளில் நாளை முதல் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறந்தவுடன் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்