தமிழக செய்திகள்

போலீசாருக்கான விளையாட்டு போட்டி

நாகர்கோவிலில் போலீசாருக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

தினத்தந்தி

நாகர்கோவிலில் போலீசாருக்கான விளையாட்டு போட்டி நடந்தது.நாகர்கோவில், 

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் ஆகிய 4 உட்கோட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு இடையேயான கிரிக்கெட், பேட்மின்டன், வடம் இழுத்தல், கபடி, எறிபந்து, கைப்பந்து, கோகோ போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்