தமிழக செய்திகள்

சீயோன் பள்ளியில் விளையாட்டு விழா

கொடைக்கானல் சீயோன் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.

தினத்தந்தி

கொடைக்கானல் நகரில் உள்ள சீயோன் மேல்நிலைப்பள்ளியில் 38-வது ஆண்டு விளையாட்டு விழா மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு ஓட்டப்பந்தயங்கள், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் கராத்தே உள்பட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் பெற்றோர்களுக்கு மெதுவாக நடந்து செல்லுதல் போட்டி நடைபெற்றது. போட்டிகளை போலீஸ் துணை சூப்பிரண்டு மதுமதி தொடங்கி வைத்தார்.

இதில் 4 பிரிவுகளாக நடந்த போட்டிகளில் மில்டன் அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளியின் தாளாளரும், முன்னாள் நகராட்சி தலைவருமான டாக்டர் கே.சி.ஏ.குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயாஆர்தர் வரவேற்றார். விழாவில் கோடை சர்வதேச பள்ளி கமாண்டர் அஸ்வின் ஜான்பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் இணை தாளாளர் ஜெசிகுரியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்