திருக்கோவிலூர்
மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் திருக்கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மேலும் இவர்கள் தர்மபுரியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றனர். இதையடுத்து மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தகுதி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் கணித ஆசிரியை நித்தியகல்யாணி விளையாட்டு சீருடை வழங்கினார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் வினோபா, உடற்கல்வி இயக்குனர் முத்தரசு, உடற்கல்வி ஆசிரியர்கள் மலர்கொடி, மணிமேகலை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் காமராஜ் நன்றி கூறினார்.