தமிழக செய்திகள்

நாய் கடித்ததில் புள்ளிமான் சாவு

நாய் கடித்ததில் புள்ளிமான் செத்தது.

தினத்தந்தி

சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள இருங்களூரில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று புள்ளிமானை துரத்திச்சென்று கழுத்து பகுதியில் கடித்தது. இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் நாயை விரட்டி மானை மீட்டனர். பின்னர் இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் மானை பரிசோதனை செய்தபோது, மான் இறந்துவிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மானை உடற்கூறு பரிசோதனை செய்த பின்னர், ஊராட்சி தலைவர் வின்சென்ட் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் அந்த பகுதியில் மானின் உடலை புதைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது