தமிழக செய்திகள்

நாய் கடித்து குதறியதில் புள்ளிமான் சாவு

திருமங்கலம் அருகே நாய் கடித்து குதறியதில் புள்ளிமான் இறந்தது.

திருமங்கலம், 

திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டி, ராயபாளையம் கிராம பகுதியில் 400-க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இரை தேடி வரும் மான்கள் அடிக்கடி விபத்தில் சிக்கியும் வேட்டையாடப்பட்டும் உயிரிழந்து விடுகிறது. இது தவிர அவ்வப்போது நாய்கள் வேட்டையாடும் சம்பவம் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று காலை கரிசல்பட்டி பகுதியில் இரை தேடிவந்த 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமானை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் துரத்தி கடித்து குதறின. இதை கண்ட அவ்வழியாக வந்தவர்கள் நாய்களை துரத்தி விட்டனர். நாய்கள் கடித்ததால் பலத்த காயம் அடைந்த புள்ளிமான் நடக்க முடியாமல் கீழே விழுந்தது அதைக் கண்ட இப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். வெகு நேரம் ஆகியும் வனத்துறை அதிகாரிகள் வரவில்லை. இதனால் காயம் அடைந்து துடித்த மான் சிறிது நேரத்தில் உயிர் இழந்தது. அதிக வனவிலங்குகள் இருக்கும் சிவரக்கோட்டை ராஜபாளையம் பகுதியில் வனச்சரணாலயம் அமைக்க வேண்டும் திருமங்கலம் பகுதியில் ஒரு வனச்சரக அலுவலகம் அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்