தமிழக செய்திகள்

உலகளந்த பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்றது.

தினத்தந்தி

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வசந்த உற்சவம் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று காலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் 7 மணிக்கு கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. இதையடுத்து 11 மணிக்கு ஸ்ரீ புஷ்பவல்லிதாயார் சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் மற்றும் நம்மாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நிகழ்ச்சி கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தான ஏஜெண்ட் கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழாக்குழுவினர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது