Image courtesy : AFP 
தமிழக செய்திகள்

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் ஜூன் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ஜூன் முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தினத்தந்தி

சென்னை

ஸ்பூட்னிக் வி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசி ஆகும். கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தற்போது நாட்டின் இரண்டாவது மிக விலையுயர்ந்த கொரோனா தடுப்பூசி ஆகும்.

ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தெடர்ந்து ஐதராபாத்தில் கடந்த 17 ஆம் தேதி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிசேதனை முறையாக செலுத்தப்பட்டது. இதைத்தெடர்ந்து விசாகப்பட்டினத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், ஜூன் 2 ஆவது வாரம் முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்போலே மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அப்ப்போலோ குழும மருத்துவமனைகளின் நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி வெளியிட்டு உள்ள அறிக்கையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 2கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கப்படும்."நாட்டின் 80 இடங்களில் 10 லட்சம் தடுப்பூசிகள் போட்டு உள்ளோம் செப்டம்பர் மாதத்திற்குள் இரண்டு கோடி ஜதடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் உள்ளோம் என்று கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை