தமிழக செய்திகள்

நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது - எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக இலங்கை கடற்படை நடவடிக்கை

நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 14 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு