கிளிநொச்சி,
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது .
கடந்த மார்ச் 24ம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறையிலுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்யுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, மீனவர்கள் 12 பேரும் ஜாமீனில் செல்ல விரும்பினால், ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று அண்மையில் நீதிபதி தெரிவித்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.