தமிழக செய்திகள்

கருணாநிதியின் உடல்நிலை பற்றி ஸ்டாலினிடம் இலங்கை பிரதமர் ரணில் கேட்டறிந்தார்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியின் உடல்நிலை பற்றி ஸ்டாலினிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கேட்டறிந்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 27-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நிலை தேறிவருகிறது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதி உடல் நிலை பற்றி விசாரித்து வருகிறார்கள்.

அவரது உடல் நிலை பற்றி கவலை அடைந்த தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன் 5 நாட்களாக விடிய விடிய காத்து கிடந்தார்கள். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை பார்த்த படங்கள் வெளியிடப்பட்ட பின்புதான் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் 31ந்தேதி அன்று இரவு காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார். நேற்று ஆகஸ்ட் 1-ந்தேதி 5-வது நாளாக கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக நடிகர் விஜய், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ,நடிகர் விவேக், நடிகர் கவுண்டமணி, டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் அஜித், விஜய் ஆண்டனி ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசி, கருணாநிதியின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற்று வரவேண்டும் என நடிகை ஓவியா கூறி உள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் மேலும் முன்னேற்றமாக அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். முதலில் டாக்டர்கள் அவரை படுக்கையில் சிறிது நேரம் அமரவைத்தனர். அதன் பிறகு அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்து சிறிது நேரம் பயிற்சிகள் அளித்தனர்.

இந்நிலையில் இன்று 6வது நாளாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காவேரி மருத்துவமனைக்கு இன்று சென்று மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அதன்பின்னர் அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என கூறி உள்ளார்.

இதேபோன்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியின் உடல்நிலை பற்றி மு.க. ஸ்டாலினிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று தொலைபேசி வழியே கேட்டறிந்து உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை