தமிழக செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

ஸ்ரீரங்கம்,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டுத்தலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள் அனுமதியின்றி வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை, காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு