தமிழக செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவு; மாணவ-மாணவிகள் உற்சாகம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவு; மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

தினத்தந்தி

தேர்வு நிறைவடைந்தது

இந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 581 மாணவர்களும், 17 ஆயிரத்து 108 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 89 பேர் தேர்வு எழுதும் வகையில், 173 மையங்களில் தேர்வு நடந்தது. கடந்த 6-ந் தேதி தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்றுடன் நிறைவுபெற்றது.

பள்ளி மாணவ-மாணவிகளின் வாழ்வில் முக்கிய மைல்கல்லான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இருந்தனர்.

துள்ளிக்குதித்தனர்

தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்ட மகிழ்ச்சியில் பள்ளி வளாகங்களில் மாணவ, மாணவிகள் துள்ளி குதித்தனர். மேலும், தேர்வு முடிந்தவுடனேயே விடுதிகளில் தங்கி இருந்த மாணவிகளை பெற்றோர் நேரில் வந்து பெட்டி படுக்கைகளை தூக்கிக்கொண்டு ஊருக்கு அழைத்து சென்றனர்.

மாணவர்கள் தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் ஒருவர் மீது ஒருவர் மையை தெளித்து கொண்டு, தங்களது சக நண்பர்களுடன் சேர்ந்து ஆரவாரத்துடன் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்