தமிழக செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு தொடங்க 290 மாணவ- மாணவிகள் எழுதினர்

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 290 மாணவ- மாணவிகள் எழுதினர்.

கரூர்,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தமிழ் முதல் பாட தாள் தேர்வுடன் நேற்று தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் 192 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக 53 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை எழுத மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வந்தனர். தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து இறுதிகட்ட படிப்பில் மும்முரமாக இருந்தனர். தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் தேர்வில் வெற்றி பெற மாணவ- மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறிக்கொண்டனர். கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிரார்த்தனை வகுப்பில் மாணவ-மாணவிகளை ஆசிரிய-ஆசிரியைகள் வாழ்த்தி அறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவிகளுக்கு சில ஆசிரியைகள் கைக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாவட்டத்தில் 6,338 மாணவர்களும், 6,180 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 518 மாணவ- மாணவிகள் எழுத இருந்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் 4 மாணவர்கள் நேற்று சிறப்பு விலக்கு பெற்றிருந்தனர். 6,156 மாணவர்களும், 6,134 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 290 பேர் தேர்வு எழுதினர். 224 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்களில் 296 பேரில் 265 பேர் தேர்வு எழுதினர். 31 பேர் தேர்வுக்கு வரவில்லை.தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 15 நிமிடங்கள் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாள்களின் முகப்பு பக்கத்தை நிரப்பவும் கொடுக்கப்பட்டிருந் தன. தேர்வு காலை 10.15 மணி முதல் பகல் 12.45 மணி வரை நடந்தது.

தேர்வில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி, தாசில்தார் அருள் ஆகியோர் உடன் இருந்தனர். தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதியுடன் முடிவடைகிறது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி