தமிழக செய்திகள்

முன்விரோதம் காரணமாக நண்பருக்கு கத்திக்குத்து

ஆம்பூர் அருகே முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (29). இவர் ஆம்பூரில் உள்ள தனியார் ஷு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் நண்பர்கள். சில மாதங்களாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வெங்கடேசன், இளையராஜா பணிபுரியும் ஷு தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். பின்னர் இளையராஜாவை தொழிற்சாலையை விட்டு வெளியே வரவழைத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளையராஜாவை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்