தமிழக செய்திகள்

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

திருச்சுழி, 

திருச்சுழி அருகே மண்டபசாலை ஊராட்சிக்கு உட்பட்ட ம.ரெட்டியபட்டி செல்லும் சாலையில் குடியிருப்புப்பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் தான் போலீஸ் நிலையம், குடியிருப்பு, நூலகம், வங்கிகள், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளது. இந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் வாருகால் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவு நீர் ஓடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு