சென்னை,
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான உங்களில் ஒருவன் (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த விழாவில் ராகுல் காந்தி பேசும் போது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து எனது அம்மாவிடம் பேசும்போது, அவர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள் என்று என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் எனக்குத் தெரியும் என்று கூறினேன். அதன்பிறகு, அவரிடம் மு.க.ஸ்டாலின் வயது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர் எத்தனை வயது என்று கேட்டார். நான், 69 என்று கூறினேன். அதனை அவர் நம்ப மறுத்தார். ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கேட்டேன்.
அவருக்கு 58 அல்லது 60 என்று கூறினார். உடனே, கூகுள் செய்து ஸ்டாலினின் வயதைக் காட்டினேன். அப்போதுதான் அவர் நம்பினார். இந்தப் புத்தகத்தில் ஸ்டாலின் இளமையாக இருப்பது குறித்து எழுதியுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால், தான் இளமையாக இருப்பது குறித்து ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும் ராகுல் காந்தி இவ்வாறு பேசியதை கேட்டு மு.க ஸ்டாலின் உள்பட அனைவரும் சிரித்தனர்.