தமிழக செய்திகள்

தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக ஸ்டாலின் பழி போடுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்

தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது திமுக தலைவர் ஸ்டாலின் பழி போடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு தெர்மல் ஸ்கேனரை அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும், அவ்வாறு வாங்கப்பட்ட ஸ்கேனர்களின் தரம் மிக மோசமாக இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தெர்மல் ஸ்கேனர் கொள்முதல் தொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது திமுக தலைவர் ஸ்டாலின் பழி போடுவதாக குறிப்பிட்டார். தெர்மல் ஸ்கேனர் கருவிகள் தலா ரூ.1,765+18% ஜிஎஸ்டி வரியுடன் மட்டுமே வாங்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். உலகிலேயே முதன் முறையாக வீடுகள் தோறும் கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என கண்டறியும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தான் செயல்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்