தமிழக செய்திகள்

தி.மு.க. கூட்டணி பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க. கூட்டணி பற்றி மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார்; அமைச்சர் வேலுமணி

தி.மு.க. கூட்டணி பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க. கூட்டணி பற்றி மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார் என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் கூட்டணி பேச்சுவார்த்தையில், பா.ம.க. மற்றும் பாரதீய ஜனதா கட்சியுடன் முடிவு ஏற்பட்டு விட்டது. இதில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேலவை தொகுதி ஒதுக்கீடு செய்வது என்றும் முடிவானது.

இதேபோன்று பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தி.மு.க. 20 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறும். ஆனால் பா.ஜ.க. மற்றும் பா.ம.க. உடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. அறிவிப்பை வெளியிட்டு விட்டது என கூறினார்.

வேலூரில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பேசும்பொழுது, பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. மனதார கூட்டணியில் சேரவில்லை. அச்சத்தினாலேயே சேர்ந்துள்ளது என்று ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தி.மு.க. கூட்டணி குறித்து கவலைப்படாமல் அ.தி.மு.க. கூட்டணி பற்றி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார் என அமைச்சர் கூறியுள்ளார்.

திராவிட கட்சிகளை அழிப்பதே தனது நோக்கமென கூறிய பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் அ.தி.மு.க. திராவிட கட்சி இல்லை என உறுதியாகி உள்ளது என ஸ்டாலின் நேற்று பேசினார்.

இந்த நிலையில், அமைச்சர் வேலுமணி பேசும்பொழுது, வைகோ ஸ்டாலினை பற்றி பேசாததா? ஆனால் அவருடன் கூட்டணி வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்