தமிழக செய்திகள்

சென்னையில் நாளை 12 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (26.09.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (26.09.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-11ல் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரி, மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-26ல் மாதவரம் பால் காலனியில் உள்ள தனுவாஸ் மினி ஹால், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-48ல் பார்த்தசாரதி தெருவில் உள்ள பாண்டியன் திரையரங்கம், இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-60ல் ஜார்ஜ் டவுன், அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளி, திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-75ல் ஓட்டேரி இணைப்பு சாலையில் உள்ள மூலிகை பூங்கா மைதானம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-93ல் முகப்பேர், நந்திலி லட்சுமணன் தெருவில் உள்ள ஏ.எஸ்.என். மஹால், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-98ல் கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரன் கார்டன் 6வது தெருவில் உள்ள வார்டு அலுவலகம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-119ல் இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள நல்வாழ்வு திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்10) வார்டு-128ல் விருகம்பாக்கம், காமராஜ் சாலையில் உள்ள சமுதாயக் கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-149ல் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கல்யாணி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-166ல் நங்கநல்லூர், விஸ்வநாதன்புரம் பிரதான சாலை, கனகாம்பாள் காலனியில் உள்ள கே.சி.டி மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-200ல் செம்மஞ்சேரி, பழத்தோட்ட சாலையில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்