தமிழக செய்திகள்

8 வார்டுகளில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

தினத்தந்தி

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை 8 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (29.08.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-13ல் எம்.ஜி.ஆர். சாலை சுங்கச்சாவடி, ஆர்.பி.சி. பொதுப்பள்ளி, மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-25ல் மாதவரம் வட்டச்சாலையில் உள்ள வீட்டுவசதி துறை விளையாட்டு மைதானம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-40ல் புது வண்ணாரப்பேட்டை, திருவள்ளுவர் நகரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5) வார்டு-60ல் ஜார்ஜ் டவுன், அங்கப்பன் நாயகன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளி, திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-65ல் கொளத்தூர், பள்ளி சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-122ல், நந்தனம், 2வது குறுக்கு டர்ன்ஸ்புல் சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-188ல், மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனைக்கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15) வார்டு-199 சோழிங்கநல்லூர், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து