தமிழக செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்வது வரவேற்கத்தக்க மாற்றம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்வது வரவேற்கத்தக்க மாற்றம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். #MKStalin #KamalHaasan #Rajinikanth

சென்னை,

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக 22-ந் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசு நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்றும், அனைத்துகட்சி கூட்டத்தில் மு.கஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,

அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வது வரவேற்கத்தக்க மாற்றம், இது தமிழக எதிர்காலத்துக்கு நல்லது. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கமல், ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்