திருப்பூர்,
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் ஸ்டாலின் போட்ட திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தனது தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் ஸ்டாலின் போட்ட திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டது. நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான். வல்லரசு நாட்டில் கூட மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது கிடையாது. வளர்ந்த நாடுகளில் கூட கொரோனாவை கட்டுபடுத்த முடியவில்லை; ஆனால் நாம் கட்டுபடுத்தியுள்ளோம். அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.