தமிழக செய்திகள்

சென்னையில் நாளை 12 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (25.09.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-10ல் பூந்தோட்ட தெருவில் உள்ள பூந்தோட்ட விளையாட்டுத் திடல், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-44ல் பெரம்பூர், துளசிங்கம் தெருவில் உள்ள எஸ்.கே.என்.எஸ்.பி.எம்.சி. விவேகானந்தா வித்யாலயா இளநிலை கல்லூரி, இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-58ல் பெரியமேடு, நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள பழைய சமுதாயக் கூடம், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6),

வார்டு-70ல் பெரம்பூர், ராஜா தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-83ல் கொரட்டூர், அக்ரஹாரம், அன்னை நகர் சாலையில் உள்ள மோகன் கார்டன், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-108ல் சேத்துபட்டு, டாக்டர் குருசாமி சாலையில் உள்ள அண்ணா அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-118ல் அண்ணா சாலையில் உள்ள டி.யூ.சி.எஸ். காமதேனு திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்10) வார்டு-140ல் மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் எத்திராஜ் நகர், கோடம்பாக்கம் சாலையில் உள்ள வி.கே.எம். மஹால், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11),

வார்டு-148ல் நெற்குன்றம், என்.டி. பட்டேல் சாலையில் உள்ள ஜி.எம். மஹால், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-162ல் தில்லைகங்கா நகர், 45வது தெரு, உள்வட்ட சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-175ல் ஆதம்பாக்கம், லட்சுமி ஹயக்ரீவர் நகர், 3வது குறுக்கு தெருவில் உள்ள விளையாட்டுத்திடல், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-187ல் மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து