தமிழக செய்திகள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 2,650 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

அரசு, சுயநிதி கல்லூரிகளில் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் இன்று கலந்தாய்வு தொடங்கிறது.

சென்னையில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல் நாளில் சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் பங்கேற்க உள்ளனர். 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்லி மாணவர்களுக்கு நாளை, நாளை மறுநால் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பொதுப்பிரிவினருக்கு 30-ம் தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து