தமிழக செய்திகள்

மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் 3-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் 3-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மேட்டூர்:

மேட்டூர் பழைய அனல் மின் நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் 3-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் கடந்த 9-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த பணி நேற்று முடிவடைந்ததை அடுத்து இந்த யூனிட்டில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.

ஏற்கனவே 3-வது யூனிட் தவிர 1, 2, மற்றும் 4-வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 3-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இதன்மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முழு உற்பத்தி திறனான 840 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு