தமிழக செய்திகள்

வரும் 11-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சண்டிகருக்கு ரெயில் சேவை

மதுரையில் இருந்து சண்டிகருக்கு 11-ந் தேதி முதல் ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

மதுரை,

மதுரையில் இருந்து சென்னை வழியாக பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கால் இந்த ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, வருகிற 11-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சண்டிகருக்கு மீண்டும் ரெயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் (வ.எண்.02687) ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமைகளில் அதிகாலை 3.50 மணிக்கு சண்டிகர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், சண்டிகரில் இருந்து வருகிற 16-ந் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.02688) சண்டிகரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

இந்த ரெயிலில், 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் 3, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 9, இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் 4, சரக்கு மற்றும் கார்டு பெட்டியுடன் கூடிய இருக்கை வசதி பெட்டிகள் 2 இணைக்கப்பட்டிருக்கும்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை