தமிழக செய்திகள்

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: கோவை போலீஸ் அணியினர் சாம்பியன்

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கோவை போலீஸ் அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.

நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் கோவை போலீஸ் அணியினரும், வேட்டமங்கலம் போலீஸ் பயிற்சி அகாடமி அணியினரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில், கோவை போலீஸ் அணியினர் 25-10, 25-8 என்ற புள்ளிக்கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.

இதையடுத்து, முதலிடம் பிடித்த கோவை போலீஸ் அணியினருக்கும், 2-வது இடம் பிடித்த வேட்டமங்கலம் போலீஸ் பயிற்சி அகாடமி அணியினருக்கும், 3-வது இடம் பிடித்த தர்மபுரி ராக்கி பாய்ஸ் அணியினருக்கும், 4-வது இடம் பிடித்த புகழூர் கைப்பந்து அணியினருக்கும் கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. போட்டியை வேட்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி