தமிழக செய்திகள்

மாநில அளவிலான வாலிபால் போட்டி நிறைவு

கரூரில் 3 நாட்கள் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டி நிறைவு பெற்றது.

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இதில், திருச்சி, கோவை, கரூர் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதையடுத்து நேற்று இறுதி போட்டி நடைபெற்றது.

இதில், முதலிடத்தை கோவை அணியும், 2-வது இடத்தை பொள்ளாச்சி அணியும், சென்னை அணி 3-வது இடத்தையும், மற்றொரு சென்னை அணி 4-வது இடத்தையும் பெற்றன.

இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன், வி.கே.கருப்பண்ணன், கூடைப்பந்து கழக செயலாளர் கணபதி ஆகியோர் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு