தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் நிலவரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 4,57,76,311 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

சென்னை,

கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 1,419 பேரும் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

மொத்தம் உள்ள 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் தங்கள் வாக்குகளை செலுத்தவில்லை. பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் வருகின்ற மே 2 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 76 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைத்து எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்