சென்னை,
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும், அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது செல்லும் என்றும் தீர்ப்பு கூறிய ஐகோர்ட்டு, வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை நேற்று தள்ளுபடி செய்தது.
அதையடுத்து எதிர் தரப்பான, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் முடிவை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மேல்முறையீடு செய்தால் எங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.