தமிழக செய்திகள்

அரசு பஸ் மீது கல்வீச்சு

சந்தவாசல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

கண்ணமங்கலம்

சேத்துப்பட்டு அருகே உள்ள பெரியகொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 53) அரசு பஸ் டிரைவர்.

இவர் நேற்று திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு அரசு பஸ்சை டிரைவர் பன்னீர்செல்வம் ஓட்டிச்சென்றார்.

சந்தவாசல் அருகே தேப்பனந்தல் கூட்ரோட்டில் இரவு 7 மணிஅளவில் வந்தபோது மர்மநபர் ஒருவர் பஸ்சின் முன்புற கண்ணாடி மீது கல்வீசினார்.

இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது. மேலும் பன்னீர்செல்வம் காயமடைந்தார்.

இதுகுறித்து பன்னீர்செல்வம் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் மீது கல்வீசிய நபரை தேடி வருகின்றனர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை