தமிழக செய்திகள்

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

வாணியம்பாடி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

வாணியம்பாடியை அடுத்த புல்லூர் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் குழந்தை திருமணம் நடக்க உள்ளதாக தாலுகா அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திம்மாம்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் திம்மாம்பேட்டை போலீசார் உதவியுடன் நேரில் சென்று விசாரித்தனர்.

அப்போது 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைக்க உள்ளது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவீட்டாரிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் 17 வயதாகும் பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டப்படி குற்றம் எனவும், திருமணம் நடத்தினால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவீர்கள் என எடுத்துக் கூறினர். அதைத்தொடர்ந்து குழந்தை திருமணம் நடத்த மாட்டோம் என இருவீட்டாரும் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு