தக்கலை,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் பேச்சுரிமையை தடுப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அழகியமண்டபத்தில் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. பத்மநாபபுரம் தொகுதி தலைவர் அபுபக்கர் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் ஆரிப்பைசல் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.